Saturday, September 28, 2013

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க இலவச மென்பொருள்

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க இலவச மென்பொருள்


வணக்கம் அன்புநெஞ்சங்களே..
பொதுவாக நாம் அதிககொள்ளவு கொண்டகோப்புகளை WinZip, 7-Zipபோன்றமென்பொருட்களின்துணையுடன் தான்கோப்புகளை Compress செய்துபயன்படுத்துவோம்.


இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும்பத்து மடங்கு குறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாகமாற்றித்(compression) தருகிறது.
மென்பொருளின் பெயர்: KGB Archiver
இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளைமிகவிரைவாககுறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித்தருகிறது.
1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாகமாற்றித்தருகிறது.
இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிககொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம்செய்துகொள்ள முடிகிறது.
இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களைஆதரிக்கிறது.
compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, High என்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம்.இம்மென்பொருள் நிறுவ உங்கள் கணினியில் 1.5 GHz Processer,குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம் இருக்க வேண்டும்.

குறிப்புஇம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File-களைஇதே மென்பொருளைக்கொண்டுதான் விரிக்க முடியும்எனவேஇம்மென்பொருளானது உங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்கவேண்டும்.இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compressசெய்யமுடியாது.மற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறதுமற்றCompression Software-களைக் காட்டிலும்கோப்புகளை குறைந்த அளவிற்குசுருக்கித் தருவதால் இம்மென்பொருள் உண்மையிலேயே அதிகபயன்தரக்கூடிய ஒன்று.
அடிக்கடி அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை பரிமாற்றம செய்துகொள்ளும் நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவும் என்பதில்சந்தேகமில்லைமென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி
: KGB Archiver

Nokia Phone இல் Security Code இனை Reset செய்வது எப்படி?


இன்று ஒரே நிமிடத்தில் உங்களுடையNokia Phone இன் Security Code இனைReset செய்வது எப்படி என்று பார்ப்போம்.இப்படி செய்வதால் உங்களுடைய
Phone இன் Security Code 12345 இற்கு மாறிவிடும். 

தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable

02.NSS என்ற மென்பொருள் - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனைData Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள். 

அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்



அவ்வளவுதான்....இப்போது உங்களுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.

Tuesday, September 24, 2013

fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம்

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் fax அனுப்பலாம்.  இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.

GotFreeFax

FaxZero

PopFax 

அனைத்து மென்பொருள்களுக்கும் ACTIVATION KEY இலவசமாக

இன்று நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் அனைத்தும் வியாபார நோக்கில் உருவாக்கப்பட்டவை.
இதை எப்படி இலவசமாக பண்படுத்துவது என்ற தகவல்களை பார்க்கலாம் வாங்க.....

தொழில்நுட்ப 
வளர்ச்சியில் பெரும்பாலும் 
மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது.

சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத் வாங்குவது கிடையாது, காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள்.

இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது.

1. முதலாவதாக கூகுள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com

2. பின்னர் கூகுள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.

3. அதன் பிறகு கூகுள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.

அதில் எது வேண்டுமோ தெரிவு செய்து உங்கள் மென்பொருளை ஆக்டிவ் பண்ணுவதற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இத்தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் கமென்ட் மற்றும் ஷேர் செய்யுங்கள்.........



நீங்கள் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கிவிட்டீர்களா ! இதுக்கு உங்கள் பதில் ஆம் என்றால்... இனி உங்கள் கம்ப்யூட்டரை பாதுக்காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

இதுவரை நீங்கள் எப்படி இருந்தாலும் சரி இனி உங்கள் கம்ப்யூட்டர் விசயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். அதாவது நீங்கள் கஷ்டப்பட்டு விலை அதிகம் கொடுத்து வாங்கிய உங்கள் கம்ப்யூட்டரின் முக்கியமான ஹார்டுவேர் பாகங்களை இன்னொருவர் உங்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது அதனை சரி செய்ய கடை காரரிடம் கொடுப்பதற்க்கு முன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டுவேரை பற்றிய குறிப்புகளை நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் கம்ப்யூட்டர் சரி செய்து வந்த பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்கு உள்ளே உள்ள ஹார்டுவேர்கள் ( Mother Board, Processor, Ram, Hard Disk)அனைத்தும் முன்பு இருந்தவைதான் இப்பொழுதும் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம்.


அது எப்படி என்று கேட்க்கிறீர்களா ?

அது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. இங்கு கீழே சொன்ன முறைப்படி இப்பொழுதே உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய குறிப்புகளை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் மற்றும் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள

Start > Run என்ற பட்டனை அழுத்தி msinfo32.exe என்று டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.






















































அடுத்து Run பட்டனை கிளிக் செய்து இங்கு சொன்ன எழுத்துக்களை டைப் செய்யுங்கள்.











Run ல் மேலே சொன்ன எழுத்துக்களை டைப் செய்து எண்டரை அழுத்தியதும் இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதிலும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் இருக்கும்.

இந்த System டிஸ்பிளேயில் நீங்கள் முக்கியமான உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள
Processor Type மற்றும் Ram -ன் அளவை தெரிந்துகொள்ளலாம்.


























அடுத்ததாக இதே தட்டில் தலைப்பில் Display என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். இதில் முக்கியமாக உங்கள் மதர்போர்டின் மாடல் நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கம்ப்யூட்டரில் மதர்போர்டு என்பது மிக முக்கியமான பகுதி. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விலை அதிகமான தரம் மிக்க உங்கள் மதர்போர்டை உங்களுக்கு தெரியாமல் ஒருவர் மாற்றிவிட்டு தரம் குறைந்த ஒரு போர்டை வைத்து உங்களிடம் தந்துவிடமுடியும். அதன் வித்தியாசம் உங்களுக்கு உடனே தெரியாது. அதனால் இந்த மாடல் நம்பரை வைத்துதான் நீங்கள் உங்கள் மதர்போர்டு சரியாகத்தான் உள்ளதா என தெரிந்துகொள்ள முடியும்.


























அடுத்ததாக உங்கள் ஹார்டிஸ்க்.

உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு 320 GB, 250 GB, 160 GB, 100 GB, 80 GB, 40 GB, 20GB என்று பல அளவுகளில் இருக்கலாம் எதுவாக இருந்தாலும் சரி அதன் அளவு என்ன என்பதை பார்த்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதனை தெரிந்துகொள்ள உங்கள் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் உள்ள My Computer என்ற ஐக்கானை செலெக்ட் செய்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து கடைசியாக உள்ள Properties என்ற இடத்தை தொடுங்கள்











உடனே உங்களுக்கு கீழ் காணும் ஒரு தட்டு ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு என்ன என்பதை பார்த்து குறிப்பு எழுதி வைத்துக்கொள்ளலாம்.

























இங்கு மேலே உள்ள படத்தில் C டிரைவின் ஹார்டிஸ்கின் அளவு மட்டும் கிட்டத்தட்ட 50 GB என்று தெரியப்படுத்துகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் இன்னொறு டிரைவ் D என்ற பெயரிலும் இருக்கலாம் அதன் அளவு 30 GB என இருக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் கம்யூட்டரில் உள்ள மொத்த ஹார்டிஸ்கின் அளவு 80 GB என நீங்கள் கணக்கெடுத்துக்கொள்ளலாம்.
இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் உங்கள் Mother Board Model No, Manufactur Name, Processor Type, Ram Capacity, Hard Disk Capacity போன்ற விபரங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களை எவரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி விட முடியாது.

Motherboard, Processor, Hard Disk, Ram என்றால் என்ன ? அதன் பயன்கள் என்ன ?


மெமரி கார்டு தன்மை, வகைகள் குறித்த சில தகவல்கள் !!செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் நான்கு வகை கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. இதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்….
எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters). SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும். எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது.
இதை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற வகையில் உள்ளது. இதை மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும். எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.
இதில் நாம் பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க நம்மால் படிக்க அல்லது பார்க்க முடியும். SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமின் படி நாம் இதை பார்மேட் செய்ய வேண்டும் ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம். ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம் இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்

PENDRIVE ஐ RAM ஆக மாற்ற.........


நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.




  • பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும். 
  • My Computer மீது Right Click செய்யவும். 
  • இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும். 
  • இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும். 
  • இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும். 
  • இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும். 
  • இப்போது Change என்பதை தெரிவு செய்யவும். 


  • இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும். 
  • இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும். 
  • இப்போது இதனை save செய்யவும். 
  • கம்ப்யூட்டரை Restart செய்யவும்.

Sunday, September 22, 2013

ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ?

நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போ ன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படு த்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாம ல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூ டிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்ற வற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.
Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியி ன் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள்கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிற து Desktop கணி னி என்றால் Wireless Device தனியாக போட்டிருக்கவேண்டும் 
சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார் ப்போம் 
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன் லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.Install செய்த Virtual Router மென் பொருளை Open செய்து கொள்ள வும் பின்பு கீழே படத்தில் உள்ள வாறு வரும் 
அதில் Network Name (SSID) என்ப தில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும் Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும் 

3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்ல து Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொ டுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

Saturday, September 21, 2013

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....

நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரட்ச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரட்ச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து






அதில் msconfig என்று டைப் செய்து எண்டரை அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு ஓப்பன் ஆகும்


அதில் Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்துவிடலாம்.

அடுத்து Start > Control Panel > Add or Remove Programs சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை (Software) நீக்கிவிடலாம்.



அடுத்து My Computer > C Drive சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து Disk clean up என்ற இடத்தை கிளிக் செய்து



அதில் உள்ள அனைதையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை.

அடுத்து Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற பகுதிக்குச் சென்று Defragment என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.



இந்த மூன்று முறையில் உங்கள் கம்ப்யூட்டரை கிளீன் செய்வதால் உங்கள் கம்ப்யூட்டரில் முன்பு இருந்த வேகம் குறைவு நீங்கி சிறப்பாக செயல்படும். இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர் தேவையில்லை.

2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல் கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பிரட்ச்சனையான பகுதி (Error Display) அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.





இந்த பிரட்ச்சனை தட்டை (Error Display) எப்படி போக வைப்பது.

உங்கள் கம்ப்யூட்டரில் Start பட்டனை கிளிக் செய்து Help and Support என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.அதில் undo change your computer with System Resotre என்ற இடத்தை கிளிக் செய்து
restore my computer earliery time என்ற இடத்தை கிளிக் செய்தால்
உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு ஓப்பன் ஆகும்
அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து Next > Next அழுத்தி Finish செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும் (Restart). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரட்ச்சனை தட்டு (Error Display) மருபடியும் வராது.

3) நீங்கள் தினமும் இண்டெர் நெட் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அந்த இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்ருக்கு வருவதற்க்கு என்னென்ன செட்டப் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது பிரட்ச்சனை இல்லை. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இனைந்தது போன்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது விளக்கு போல மின்னுவதால்தான் இண்டெர் நெட் வருகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் திடீரென அந்த ஐக்கான் அந்த இடத்தில் இல்லாமல் போய் இண்டெர் நெட் வேலை செய்யவில்லை என்றால் அதை எங்கு போய் எடுப்பது மறுபடி இண்டெர் நெட்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்க்காக கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவரை கூப்பிட்டு வந்து அவருக்கு பணம் கொடுத்து அதை கொண்டு வருவீர்கள்.

சரி......... அதை எப்படி கொண்டு வருவது.

உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop-ல்) My Network Place என்ற ஒரு ஐக்கான் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சரி இல்லை என்றால் அப்படியே அந்த கம்ப்யூட்டர் படத்தில் (Wallpaper-ல்) உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து Properties சென்று Desktop என்ற தளைப்பை தேர்ந்தெடுத்து Customize Desktop என்ற பட்டனை கிளிக் செய்து மேலே My Network Place என்று எழுதப்பட்ட இடத்தில் பக்கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் கிளிக் செய்து டிக்கை வரவைத்து ok செய்து அதை மூடிவிடுங்கள்.

இப்பொழுது My Network Place என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு வலது புறம் கிளிக் செய்து Open என்ற இடத்தை அழுத்துங்கள்.
உடனே உங்களுக்கு My Network Place என்ற ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அதில் வலது புறத்தில் View Network Connections என்று எழுதப்பட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.அடுத்து உங்களுக்கு அதன் வலது புறத்தில் Local Aria Connection என்று ஒரு ஐக்கான் தோன்றும். அந்த ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் வரும் Enable என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
உடனே உங்களுக்கு பழையபடி உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar டைம் பக்கத்தில் அந்த இண்டெர் நெட் இரண்டு கம்ப்யூட்டர் ஐக்கான் வந்துவிடும். 
இனி உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டை நீங்கள் பார்க்கலாம்.





சரி.......... இனிமேல் இப்படிப்பட்ட பிரட்ச்சனைகள் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் நீங்கள் தான் மாஸ்டர்.........